மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப்படம். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பொன்னியின் செல்வன் 2’ படம் 4DX தொழில்நுட்பத்தில் CJ 4D PLEX திரையரங்களில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை ‘பொன்னியின் செல்வன் 2’ படம் பெற்றுள்ளது.
4DX தொழில்நுட்பம் உள்ள திரையரங்கில் படத்தை பார்க்கும் போது நீர், காற்று, மூடுபனி உள்ளிட்ட காட்சிகள் திரையில் தோன்றும் போது அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும். இந்த தொழில்நுட்பம் தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்படம் வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.