நடிகர் சல்மான் கானை காதலிப்பதாக எழுந்த வதந்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே. நான் சிங்கிள். சிங்கிளாக இருக்க பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் சேர்ந்து Kisi Ka Bhai Kisi Ki Jaan இந்தி படத்தில் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. அந்த படத்தில் சல்மான் கானின் காதலியாக நடித்துள்ளார். சல்மான் கானும், பூஜா ஹெக்டேவும் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சல்மான் கானும், பூஜா ஹெக்டேவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
Kisi Ka Bhai Kisi Ki Jaan விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் காதல் விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே. அவர்கூறுகையில், என்ன சொல்வது?. என்னை பற்றிய செய்திகளை அடிக்கடி படிக்கிறேன். நான் சிங்கிள். சிங்கிளாக இருக்க பிடித்திருக்கிறது. தற்போது என் கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். நான் வேலை விஷயமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். இனியும் இது போன்ற வதந்திகளுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.
57 வயதாகும் சல்மான் கான் இன்னும் சிங்கிளாக இருக்கிறார். அவர் தற்போது நடிகை லூலியா வந்தூரை காதலிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் தான் பூஜா ஹெக்டேவின் சகோதரர் ரிஷப் ஹெக்டேவின் திருமணம் கார்நாடக மாநிலம் மங்களூரில் நடந்தது. அந்த திருமண விழாவில் சல்மான் கான் கலந்து கொண்டார். இதையடுத்தே தன் காதலி வீட்டு விசேஷத்தில் சல்மான் கான் பங்கேற்றிருக்கிறார் என்று கூடுதலாக பேசத் துவங்கிவிட்டார்கள். Kisi Ka Bhai Kisi Ki Jaan படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே பூஜா, சல்மான் இடையே காதல் என அவ்வப்போது பேச்சு கிளம்புவதும், அடங்குவதுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.