செளந்தர்யாவுக்குதான் நான் ப்ரபோஸ் பண்ணியிருப்பேன்: சுந்தர்சி!

ஒருவேளை நடிகை குஷ்பு தன்னுடைய வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக செளந்தர்யாவுக்குதான் தான் ப்ரபோஸ் பண்ணியிருப்பேன் என்றும் இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. 1995ஆம் ஆண்டு வெளியான முறை மாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன், உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், வின்னர், கிரி, அரண்மனை, அரண்மனை 2, ஆம்பள, கலகலப்பு 2, ஆக்ஷன் , அரண்மனை 3 உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் சுந்தர் சி தன்னுடன் பணியாற்றிய நடிகைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக நடிகைகள் த்ரிஷா, ஓவியா, ரம்பா மற்றும் சவுந்தர்யா குறித்து பேசியுள்ள சுந்தர் சி தனது க்ரஷ் குறித்தும் கூறியுள்ளார்.

நடிகை சவுந்தர்யா குறித்து பேசியுள்ள இயக்குநர் சுந்தர் சி, தான் பணியாற்றிய நடிகைகளிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகை சவுந்தர்யாதான் என தெரிவித்துள்ளார். மேலும் ஒருவேளை நடிகை குஷ்பு தன்னுடைய வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக செளந்தர்யாவுக்குதான் தான் ப்ரபோஸ் பண்ணியிருப்பேன் என்றும் இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

நடிகை சவுந்தர்யா ரொம்ப நல்ல கேரக்டர் என்றும் இப்படி ஒரு நல்ல பெண்ணை பார்ப்பது ரொம்ப அரிது என்றும் கூறியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. மேலும் சவுந்தர்யாவின் அண்ணன் அபருக்கும் அவர் மீது பாசம் அதிகம் என்றும், அபர் தனது தங்கையை விட்டு ஒரு செகண்ட் கூட நகரமாட்டார் என்றும் கூறியுள்ளார். இறக்கும் போது கூட அண்ணன் தங்கை ஆகிய இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இறந்து விட்டார்கள், அது ரொம்பவே துரதிர்ஷ்டவசமானது என்றும் இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.