ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் த்ரிஷா!

பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியின்போது தான் ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பொன்னியின் செல்வன் 2 படத்தை பல்வேறு நரகங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராய் த்ரிஷாவின் பெயரை சொல்லும்போது மை டியர் என ஒத்த வார்த்தை சொன்னது குந்தவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் தான் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நன் மற்றும் குன் என தெரிவித்துள்ளார் த்ரிஷா. குந்தவை த்ரிஷாவை நான் செல்லமாக குன் என்று தான் அழைப்பேன் என கூறினார் வந்தியத்தேவன் கார்த்தி. அதனால் குந்தவை குன்னாகிவிட்டது. நந்தினியை நன்னாக்கிவிட்டார் த்ரிஷா.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, குந்தவை, நந்தினி என்று அழகான பெயர்களை இப்படி குன், நன் என்று சொல்லாதீர்கள் த்ரிஷா. இரண்டு அழகிகள் ஒரே ஃபிரேமில். கண்ணுபடப் போகுது, சுத்திப் போடுங்கள். கார்த்தி கூட சேர்ந்து த்ரிஷாவும் இப்படியாகிவிட்டார். ஒழுங்காக குந்தவை எண பேசிப் பழகுங்கள். நன், குன் ஏதோ ஜப்பானிய பெயர் போன்று இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.