மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பை தூண்டியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’. இதன் முதல் பாகம் ஏற்கனவே கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்வதற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே படு ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வந்த நிலையில் இந்தப்படத்திற்கான அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள சுற்றறிக்கையிலும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை அரசு வழங்கவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியில் உள்ள திரையரங்குகளை தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என வட்டாச்சியர், கோட்டாச்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது அதிகாலை நான்கு மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இரண்டாம் பாகத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.