ரூ.1000க்கு மேல் மின்சார கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே கட்ட முடியும்?

மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. ரேஷன் அட்டைகளும் கூட ஸ்மார்ட் அட்டைகள் ஆகிவிட்டன. ஆன்லைனிலும் கூட மின்சார கட்டணத்தை செலுத்த எளிய வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம். மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.
ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும்.