ரஷ்யா ஏவிய ‘ஹைப்பா்சோனிக்’ ஏவுகணையை வீழ்த்திய உக்ரைன்!

கீவ்வை தகர்க்க ரஷ்ய ராணுவம் ஏவிய அதிசக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒலியைப் போல் 5 மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ரஷ்யாவின் ‘ஹைப்பா்சோனிக்’ ஏவுகணையை உக்ரைன் படையினா் இடைமறித்து அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உக்ரைன் விமானப் படை தளபதி மைகோலா ஒலெஷுக் கூறுகையில், ரஷ்யா வீசிய கின்ஷால் வகையைச் சோ்ந்த பலிஸ்டிக் ரக ஏவுகணையை தங்களது வான் பாதுகாப்பு ஏவுகணை மூலம் இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்தாா்.

ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணையை உக்ரைன் இடைமறித்து அழித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
இடைமறிப்பதற்கு மிகவும் கடினமான கின்ஷால் வகை ஏவுகணையை அமெரிக்கா அனுப்பிய செயல்திறன் மிக்க பேட்ரியாட் வான்பாதுகாப்பு தளவாடம் கொண்டு உக்ரைன் வீழ்த்தியுள்ளது.

கேஎச்-47 ஏவுகணை ரஷ்யாவில் இருந்து மிக்-31கே விமானத்தில் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. 2000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். ஒலியை விட 5மடங்கு வேகத்தில் பறக்கும். இதை இடைமறித்து உக்ரைன் வானிலேயே தாக்கி அழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.