ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி: வைத்திலிங்கம்

ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி என்று வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார்.

அதிமுக ஓபிஎஸ் அணி துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி என்னை விட கட்சியில் ஜூனியர். எடப்பாடி தொகுதியில் 1984ல் ஜனதா தளத்திற்காக வேலை பார்த்த அவர், 1986ல் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு நின்று தோல்வியடைந்தவர். அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருப்பது சாதாரண நிகழ்வு. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்புக்கு பிறகுதான் உண்மை நிலை தெரியவரும். எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை ஒருங்கிணைப்போம்.

கள்ளச்சாராயத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுப்பது தவறல்ல. அரசியலுக்காக சிலர் அதை குறை கூறுவது சரியல்ல. ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி. அவருக்கு அரசியல் எதிர்காலம் இனி கிடையாது. டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம் என அறிவித்திருப்பதை 95 சதவீத அதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். கட்சி அழிந்தாலும் பரவாயில்லை, தான் தலைமையில் இருக்க வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். ஓ.பி.எஸ் விரைவில் சசிகலாவை சந்திப்பார். எடப்பாடியுடன் உள்ள மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் எங்கள் பக்கம் வரும்போது சேர்த்துக் கொள்வோம். முன்னாள் அமைச்சர் காமராஜ் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.