தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. இதில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. இதில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. நீதிபதி தினேஷ்குமார் வர்மா கூறும்போது, மணீஷ் சிசோடியா ஒரு செல்வாக்கு மிக்க மனிதர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் பாதிக்கப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். தற்போது டெல்லி ஐகோர்ட்டிலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.