ஒன்றிய அரசை நாம் தமிழர் கட்சியே கடுமையாக எதிர்க்கிறது: காளியம்மாள்

ஒன்றிய அரசை தமிழ்நாட்டு திமுக அரசை விட. நாம் தமிழர் கட்சியே கடுமையாக எதிர்க்கிறது என்று காளியம்மாள் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி ஆகியோரின் டுவிட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. ஆனால், அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் டுவிட்டர் கணக்கை உடனே அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதற்குதான் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் கொந்தளித்துள்ளார்.. ஒருபக்கம் திமுக மீதும், மறுபக்கம் பாஜக மீதும் பாய்ந்துள்ளார்.. 2 டுவீட்களையும் அடுத்தடுத்து பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்களில், அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கை முடக்கியது ஒன்றிய அரசு தானாம். திமுகவிற்கு சம்பந்தம் இல்லையாம்.. தமிழ்நாட்டில் முதன்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கணக்குகளை தமிழ்நாட்டு திமுக கட்சியின் அழுத்தம் இல்லாமல் தன்னிச்சையாக ஒன்றிய அரசு தடை செய்தது என்று சொல்வதை நம்ப நாங்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை. அப்போ ஒன்றிய அரசை தமிழ்நாட்டு திமுக அரசை விட, நாம் தமிழர் கட்சியே கடுமையாக எதிர்க்கிறது என்று ஒத்துக்கொள். நாம் தமிழர் பிஜேபி பி டீம் என்று சொல்லிக் கொண்டு இனிமேல் உருட்டாதிங்க..” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.