மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து டெல்லியில் மிக பிரமாண்ட பேரணி நடத்தப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு அவசர சட்டம் மூலம் சேவை துறைகளில் டெல்லி மாநில அரசு அதிகாரம் செலுத்துவதை தடுத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். பாராளுமன்றத்தில் அந்த அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து டெல்லியில் மிக பிரமாண்ட பேரணி நடத்தப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
இந்நிலையில் தலைநகரில் பள்ளியைத் திறந்துவைத்த முதல்வர் கெஜ்ரிவால் முன்னாள் அமைச்சர் மனீஷ் சிசோடியாவை நினைத்துக் கண்கலங்கினார்.
டெல்லியில் பவானா பகுதியில் தர்யாபூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் புதிய கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் டெல்லி முதல்வரும், ஆத் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளியைத் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா இந்த துறைக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், அவரையும் மீறிக் கண்கலங்கினார்.
கடந்த பிப்ரவரியில் மதுபானக் கொள்கையில் முறைகேடு செய்ததாக சிபிஐ அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.