செந்தில் பாலாஜியை சோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வரணும்: அமலாக்கத்துறை மனு!

செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பான 3 மனுக்கள் மீதான விசாரணை நேற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு 1 – செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணையில் எடுக்க வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பு. தீர்ப்பு 2 – செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்பது தொடர்பான மனுவில் தீர்ப்பு. தீர்ப்பு 3- ஓமந்தூரார் மருத்துவமனையில் இருப்பவரை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்பது தொடர்பான தீர்ப்பு. இதில் ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை விதிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. மற்ற மேலே உள்ள 3 மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி அள்ளி இன்று வழங்குகிறார்.

இந்த நிலையில்தான் கூடுதலாக செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை செந்தில் பாலாஜி ஜாமீன் மற்றும் கஸ்டடி மனுக்களுடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. தமிழக மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் நம்பிக்கை இல்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக தமிழக அரசு மருத்துவக்குழு அறிக்கை அளித்து, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்திருந்தது. செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது பைபாஸ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் அமலாக்கத்துறை மற்றும் நீதிபதி அல்லியிடமும் அறிக்கையை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் செந்தில் பாலாஜி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தற்போது செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கில், அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார்.ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும். கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார்.செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது.செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம். செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.செந்தில் பாலாஜியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. செந்தில் பாலாஜி நேற்று முதல்நாள் வரை ஆரோக்கியமாக இருந்த போது எப்படி உடல்நிலை மோசமாகும், என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.