ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் மிக மோசமாக இருந்தது. எப்போதும் இருக்கும் கோடை காலம் போல இல்லாமல் மிக மிக மோசமாக கோடை வெயில் வாட்டி எடுத்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி நேற்று வரை வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. இந்த கடும் வெயில் காரணமாக இந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையத்தில் வெயில், மழைக்கு இடையே ஒருவழியாக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனிக்க தொடங்கி உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். அதோடு இது தொடர்பாக பெற்றோர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அல்லது மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிகள் இப்போதுதான் திறந்து உள்ளன. இந்த நேரத்தில் 1000 ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் பல பள்ளிகளில் வகுப்புகள் எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். முக்கியமாக பாடங்களை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். இதை தடுக்கும் விதமாக 1000 ஆசிரியர்களுக்கும் மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

இது போக அமைச்சர் அன்பில் மகேஷ் இரண்டு முக்கியமான உத்தரவுகளை பள்ளிகளுக்கு பிறப்பித்துள்ளார். அதன்படி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் நடைபெறும்போது, முதன்மை கல்வி அலுவலர்கள் நேரில் சென்று பயிற்சிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி சரியாக வழங்கப்படுகிறதா என்று உறுதி செய்யப்படும். இரண்டாவதாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.