சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவு அமைப்பான அல்-அஷபாப் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலிய அரசுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வந்தது. இதற்காக சோமாலியாவில் நூற்றுக்கணக்கான அமெரிக்க படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிராம்ப் சோமாலியாவில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற உத்தரவிட்டார்.
இந்நிலையில், சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக 500 வீரர்கள் சோமாலியாவுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்-அஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலிய படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகள் உறுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.