சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை (குற்றப்பத்திரிகை, கைது குறிப்பானை உள்ளிட்ட) முழுமையாக வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 14 தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யபட்டார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து கடந்த 7 தேதி இரவு முதல் அமலாக்க துறை தன்னுடைய காவலில் எடுத்து விசாரித்தது. 5 நாட்களாக அவரிடம் தீவிரமாக கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. பொதுவாக அமலாக்கத்துறை விசாரணைகள் எஸ் ஆர் நோ மாதிரி கேள்விகளாக இருக்கும். அதில் வரும் பதில்களை வைத்து கிளை கேள்விகளை கேட்பார்கள். இதற்கு விளக்கமாக பதில் அளிக்க வேண்டும். செந்தில் பாலாஜியிடம் அப்படி எஸ் ஆர் நோ கேள்விகள் இந்த நாட்களில் 50 கேட்டுள்ளனர். இதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து கிளை கேள்விகள் 40 கேட்டுள்ளனர். இதற்கு செந்தில் பாலாஜி விரிவாக பதில் அளித்து இருக்கிறார். சில விஷயங்கள் குறித்து அவர் நீண்ட நேரம் விளக்கங்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் அமலாக்கத்துறை ரெக்கார்ட் செய்துள்ளது. ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட கேள்விகள் பலவற்றை செந்தில் பாலாஜியிடம் கேட்டுள்ளனர். இதை ஒரு பக்கம் ரெக்கார்ட் செய்ய இன்னொரு பக்கம் அதை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் டைப் செய்துள்ளார். செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலங்கள் அமலாக்கத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை மேலும் கஸ்டடியில் எடுக்கவும், அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை விரும்பும் என்கிறார்கள்.
விசாரணையில் பல ஆவணங்களை காட்டி அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி செந்தில் பாலாஜியிடம் இந்து சொத்துக்கள் எல்லாம் உங்களுடையதா என்று கேட்டுள்ளனர். சில ஆவணங்களை காட்டி செந்தில் பாலாஜியிடம் இதை கேட்டுள்ளனர். அதற்கு அவை என்னுடையது இல்லை என்று உள்ளார். உங்கள் தம்பியடையதா என்று கேட்டுள்ளனர். அதற்கும் என்னுடையது இல்லை என்று சொல்லி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்ற நிலையில் 3000 பக்க விசாரணை அறிக்கையை ட்ரங்க் பெட்டி ஒன்றில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பல்வேறு முக்கிய விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் விசாரணையில் கூறிய விஷயங்கள் கூற மறுத்த விஷயங்கள் ஆகியவை எல்லாம் மொத்தமாக டைப் செய்யப்பட்டு அதன் முடிவுகளும் விவரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அமலாக்கதுறை காவல் முடிந்த செந்தில் பாலாஜக்கு நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 தேதி வரை நீட்டித்து கடந்த 12 நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை 3 ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமான குற்றப்பத்திரிகையை அமலாக்கதுறை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து அமலாக்கதுறை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் தர கோரி அவரின் வழக்கறிஞர் தரப்பில் நீதிபதி அல்லியிடம் முறையீடு செய்தார். அமலாக்கதுறை தரப்பிற்கு மனு குறித்த தகவலை தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.