கப்பல் மூலம் செலுத்தப்படும் ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா மீண்டும் தொடங்கி இருப்பதால் கொரிய தீபகற்பத்தை பதற்றம் தொற்றி கொண்டுள்ளது.
வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியாவும், அமெரிக்காவும் வருடாந்திர ராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ளன. இதனை போருக்கான ஒத்திகையாக கருதும் வடகொரியா ஏவுகணை சோதனைகளை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இன்று காலை எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக பார்க்கும் மிததூர ஏவுகணையை ராணுவ கப்பல் ஒன்றில் இருந்து வடகொரியா சோதித்துள்ளது.
இந்த சோதனை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்றதாக கூறிய அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகமான கே.சி.என்.ஏ. சோதனை தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடங்கி இருக்கும் நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.