காவிரி நதிநீர் வழக்கை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலஆன இந்த பெஞ்ச்சில் நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, பிகே மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கு வரும் 25-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா 53 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 15 டிஎம்சி காவிரி நீர் மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் முறையிட்டனர். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரியில் 10,000 கன அடி நீரை மட்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. காவிரி நதிநீர் வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் காவிரி நதிநீர் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் நீதிபதிகளை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகள் பிஆர் கவாய், பிஎஸ் நரசிம்மா மற்றும் பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய புதிய பெஞ்ச் உச்சநீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கை இந்த புதிய பெஞ்ச் வரும் 25-ந் தேதி விசாரிக்க இருக்கிறது.