வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட தகவலால் மக்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது.
வடகொரியாவின் அதிபராக இருந்து வரும் கிம் ஜாங் உன் பல்வேறு அதிரடிக்கு பெயர்போனவர். அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதி வரும் கிம் ஜாங் உன் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அணு ஆயுத சோதனை ஆகியவற்றை நடத்தி உலக நாடுகளை அதிரவைத்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரில் குண்டுவெடிப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது. இது கிம் ஜாங் உன்னை கொலை செய்யப்பட்ட முயற்சி என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கிம் ஜாங் உன்னின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருந்து நவீன பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதியாகி உள்ளன. இதன்படி, அவரது பாதுகாப்பு குழுவில் உள்ளவர்கள் பிரீப்கேஸ் போன்ற பாதுகாப்பு சாதனைத்தை வைத்திருப்பார்கள். சந்தேகத்திற்குரிய நடவடிக்கை எதுவும் தெரிய வந்தாலோ அல்லது துப்பாக்கி சூடு எதுவும் நடத்தப்பட்டாலோ, அதை வைத்து கிம் ஜாங் உன்னை பத்திரமாக பாதுகாப்பார்கள். கவசம் போன்று இந்த பிரீப்கேஸை திறந்து பாதுகாக்க முடியும். கிம் ஜாங் உன்-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.