கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
கிருஷ்ணர் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல அரசியல் கட்சித்தலைவர்கள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. பாரத் என்று மாற்றுவதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆதரவு தரும் வகையில் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். ஆளுநர் ஆர்.என் ரவி நேற்றைய தினம் தனது ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில் பாரதம் எனறு குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச்செய்தியில் பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் என்று வாழ்த்தியுள்ளார். ஆளுநர் ஆர்.என் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! பகவான் கிருஷ்ணரின் நித்திய போதனைகள் நம் கடமைகளை சரியாகவும் நேர்மையாகவும் ஆற்ற தொடர்ந்து ஊக்கமளித்து பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் என்று குறிபிட்டுள்ளளார்.