தப்பி ஓட முயன்ற பல்லடம் கொலையாளியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்!

பல்லடம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் போலீசார் மூலம் காலில் சுட்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பல்லடத்தில் நடந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுப்பி உள்ளது. ஒரு குடும்பத்தையே ஒரு கும்பல் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இவரின் குடும்பம்தான் மொத்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் வீட்டில் இருந்த போது துரத்தி துரத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர். செந்தில் குமார் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது என்று செய்திகள் வந்தன. இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன்ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சிச்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இடையில் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு தரப்பும் எதிர் எதிரே கடைகள் வைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் பல்லடம் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வெங்கடேஷுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். 2 கால்களிலும் காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த காயத்திற்கான காரணம் தற்போது தற்போது வெளியாகி உள்ளது வெங்கடேஷ், சோன முத்தையா ஆகிய இருவர் திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். இதில் வெங்கடேஷை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் அவரை ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். அப்போது போலீசார் கண்ணில் கண்ணை தூவிவிட்டு அவர் தப்பி ஓட முயன்று உள்ளார். அப்போது போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர். இதையடுத்து இவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று

நேற்றும் இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் தப்பி ஓட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக கைதான செல்லமுத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட போது செல்லமுத்து தப்ப முயற்சி செய்துள்ளார். மாடியிலிருந்து குதித்து தப்பியோடிய போது, கால் எலும்பு முறிந்து செல்லமுத்து காயம் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.