அமைச்சர் ஐ.பெரியசாமி தவறே செய்யவில்லை; அவர் உத்தமர் என்று நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று சவுக்கு சங்கர் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வு செய்ய உள்ளது. ஐ.பெரியசாமிக்கு எதிராக உயர்நீதிமன்றம் மறு ஆய்வு செய்யும் வழக்கு தவிர்த்து மொத்தம் 6 வழக்குகள் உள்ளது. இதில் முதல் வழக்கு லஞ்ச ஒழிப்பு துறையில் 2011ஆம் ஆண்டு நான் அளித்த புகாரின் அடிப்படையில் ஜாபர்சேட், அவரது மனைவி, மகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தது. அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். விசாரணையின் போது என் மீது சபாநாயகர் தனபால் அளித்த ஷேங்கன் சரியில்லை என்று கூறி விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதே போல் 3 வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு வந்த வழக்கில் உணவுத்துறை அமைச்சராக உள்ள சக்ரபாணியின் மனைவி ராஜலட்சுமி சமூகசேவர் என்ற பெயரில் 2 கோடி மதிப்புள்ள வீட்டை பெற்றார். கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டது. மு.க.அழகிரியின் மகனுக்கு சமூகசேவகர் என்ற பெயரில் வீட்டு வசதி துறை சார்பில் ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தபோது தரப்பட்டுள்ளது.
வழக்குகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்யும் வேலையை லஞ்ச ஒழிப்புத்துறை 24 மணி நேரமும் செய்து வருகிறது. இந்த வழக்கில் என்னை ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள கோரி உள்ளேன். அமைச்சர் ஐ.பெரியசாமி தவறே செய்யவில்லை; அவர் உத்தமர் என்று நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.