இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஏ. ஆர். ரகுமான் தொடர்பாக பிரபல யூ-டியூப் சேனல் தவறான தகவல்களை பரப்பி வந்து இருக்கிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி தன்னை பற்றி பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
இது தொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியுள்ளதாவது:-
என் மீது அன்பு கொண்ட என் அன்பு மக்களுக்கு வணக்கம், நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்த கடிதம் மூலம் சிலை சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரர், யூ-டியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர். ரகுமான் அவர்களையும் தொடர்பு படுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அந்த யூ-டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு நொடர் இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்றும் அன்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.