சமரசம் என்பது என் சரித்திரத்திலே கிடையாது: சீமான்

சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ள நிலையில், அவரிடம் நான் பேசவில்லை என்றும் சமரசம் என்பது என் சரித்திரத்திலேயே கிடையாது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜயலட்சுமி புகாரை வாபஸ் வாங்கியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது:-

நான் தொடர்பு கொண்டு பேசியதாக சொல்வது சும்மா.. நிறைய பொய்கள் சொல்லும் போது அது ஒரு பொய்யா சொல்லிவிட்டு போறதுதானே.. 2010க்கு பிறகு நான் பேசியது இல்லை. 13 ஆண்டுகளாகிவிட்டது. எல்லா இதையும் பதிவு பண்ணி போடுகிறார்களே.. நான் பேசினால் நான் பேசியதையும் போட சொல்லுங்கள்.. சமரசம் என்பது என் சரித்திரத்திலே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. காவல்துறை எனக்கு என்ன ஆதரவாக வேலை செய்து விட்டது என்று சொல்லுங்கள்..

2011 ல் இந்த குற்றச்சாட்டை கொடுக்கும் போது இன்னைக்கு என்னை விசாரிக்கணும் என்று கூப்பிடும் காவலர்கள்..காவலர்களாக இருந்தார்களா இல்லையா.. யாரும் இன்னைக்கு வேலைக்கு சேர்ந்தவர்கள் இல்லையே.. எல்லாம் ஏசி, டிசி தானே.. அப்போ இருந்தே இருக்கிறீர்கள்தானே.. அப்போ என்னை விசாரிக்காமல் என்ன செய்தீர்கள்..

எங்கள் பிள்ளைகள் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க போகிறார்கள். அதே நேரம் வீரலட்சுமி என்ற பெண்ணும் வருகிறார். அந்த நேரம் சின்ன சலசலப்பு வருகிறது. உடனே அவர்கள் கூப்பிட்டு உங்கள் பிள்ளைகளை தகராறு இல்லாமல் பிரச்சினை இன்றி அழைத்துக் கொண்டு போக சொல்லுகிறார்கள். முதலில் போனது நாங்கள். எங்கள் மனுவை வாங்குவதற்கு தயாராக இல்லை. எடுத்த உடனேயே காவலர்கள் அழைத்துவிட்டு வீரலட்சுமியின் மனுவை வாங்குகிறீர்கள். இதனால் பிரச்சினை வருகிறது. எங்கள் பிள்ளைகள் மீது வழக்கு போட்டீர்கள். நாங்க சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டோம் என்று.. என் மேலே ஒவ்வொரு அவதூறா நீங்க வைக்கிறீங்க. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதாவது சான்று இருக்கிறதா என்று பதிவு செய்த ஊடகங்களும் கேட்கவில்லை. காவல்துறை கேட்கவில்லை. ஒருவேளை பொய்யா இப்படி சொல்லும் போது கட்டுப்பாட்டை மீறி என் தம்பி தங்கைகள் போய் தாக்கிவிட்டார்கள் என்றால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வீர்களா இல்லையா..

ஜெயராம் வீட்டை தாக்கியதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பிள்ளைகள் போய் தாக்கிவிட்டார்கள். ஆனால் முதல் குற்றவாளியாக நான் தான் சேர்க்கப்பட்டேன். 10 வருஷத்திற்கும் மேலாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் நான் ஏறி இறங்கியிருக்கிறேன். அப்போ.. நீங்க என்ன பண்ணியிருக்கனும்.. இந்த மாதிரி ஒரு பிரச்சினை வரும் என்றால் கூப்டு கண்டித்து இருக்க வேண்டும். அவர் (சீமான்) மேலே இல்லாத குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். நாளைக்கு எதாவது பிரச்சினை என்றால் நாங்கள் எல்லாம் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு எதாவது சான்று இருந்தால் கொடுங்கள் என்று காவல்துறை கேட்டு இருக்கிறதா.. என்னை அசிங்கப்படுத்துவதை அவ்வளவு ரசிக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.