பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தமிழக சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்ட மசோதாவை வேளாந்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதாவனது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்க்கப்பட்டதால், ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் ஆய்வுகள், விவசாயம் அல்லாத பணிகளுக்கு துளையிடுதல் போன்ற பணிகளுக்கு இனி அனுமதி அளிக்கப்படாது. அதேபோல், விவசாயம் அல்லாத தொழில் சார்ந்த புதிய திட்டங்களுக்கும் மயிலாடுதுறையில் இனி அனுமதி வழங்கப்படாது.