இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது!

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போதும் பூஜை விடுமுறையை முன்னிட்டு இதேபோல் சிறப்பு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இன்னொரு பக்கம் சிறப்பு பேருந்துகளுக்கு இடையில் தனியாரின் ஆம்னி பேருந்துகளும் இயங்கி வருகின்றன. சென்னை டூ தென் மற்றும் மேற்கு மாவட்டங்கள், அதேபோல் மேற்கு, தென் மாவட்டங்கள் டூ சென்னைக்கு ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து பலரும் சென்னைக்கு திரும்ப உள்ளனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆம்னி பேருந்துகள் தற்போது ஸ்டிரைக் அறிவித்துள்ளன. கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்ததற்கு எதிராக 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைப்பற்றி சிறைபிடித்துள்ளனர். இப்படி அதிகாரிகள் மூலம் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தால் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளதால் மக்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கூடுதல் கட்டணம் வாங்கியது, அதிக பயணிகளை ஏற்றியது, கமிஷன் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதோடு இல்லாமல் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உள்ள ஆம்னி பேருந்துகள் அமைப்பு.. நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அரசு கட்டண நிர்ணயம் செய்யவில்லை. அதனால் நாங்கள் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில்தான் பயணிகளை ஏற்றுகிறோம். அப்படி இருக்க இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்துகளை விடுவிக்கும் வரை ஸ்டிரைக் தொடரும் என்றும் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.