இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதிக்குள் தரைவழிச் சண்டையில் “வலி மிகுந்த இழப்புகளை” சந்தித்த போதிலும், ஹமாஸ் மீதான இஸ்ரேலின் போரைத் தொடர உறுதியளித்தார்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இன்று புதன்கிழமை காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய குண்டுவீச்சில் மூன்று வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உட்பட ஏழு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனத்தை தளமாகக் கொண்ட ஹமாஸ் போராளிகள் கூறியுள்ள நிலையில், ‘வலி இருப்பினும், வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும்’ என உறுதிப்படி அறிவித்தார்.
“நாங்கள் ஒரு கடுமையான போரில் இருக்கிறோம். இது ஒரு நீண்ட போராக இருக்கும். அதில் எங்களுக்கு முக்கியமான சாதனைகள் உள்ளன, அதேநேரம் வலிமிகுந்த இழப்புகளும் உள்ளன. எங்களுக்குத் தெரியும் – நமது வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு முழு உலகம். முழு இஸ்ரேல் தேசமும் உங்களை அரவணைக்கிறது, உங்கள் மிகுந்த துயரத்தின் போது நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்” என்று நெதன்யாகு ஒரு அறிக்கையில் கூறினார், அதில் அவர் பெருகிவரும் இராணுவ இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தார்.
“எங்கள் வீரர்கள் ஒரு அநியாயப் போரில் வீழ்ந்தனர், இது நமது நாட்டை காப்பதற்கான போர். இஸ்ரேலின் குடிமக்களே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்: நாங்கள் பணியை நிறைவேற்றும் வரை – வெற்றி வரை தொடர்வோம். இஸ்ரேலின் அனைத்து குடிமக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்: வெற்றி வரை நாம் முன்னேறுவோம்” என்று அவர் மேலும் கூறினார்.