100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனும் தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகின்றது என்று துரை வைகோ கூறினார்.
ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனும் தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகின்றது. 2008-ம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், போதிய நிதி ஒதுக்காததால் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் ரூ.2.7 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு தற்போது வெறும் ரூ.60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 சதவீதம் குறைவு. எனவே 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் பா.ஜ.க. அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.