எனது திரையரங்கில் ஆபாச படம் வெளியிட்டேனா?: டி.கே.சிவகுமார் மறுப்பு!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆபாச படங்களை திரையிட்டவர் என முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவருமான‌ குமாரசாமி தீபாவளிக்கு திருட்டு மின்சாரம் மூலம் அவரது வீட்டை அலங்கரித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த மின்வாரிய அதிகாரிகள் அவர் மீது மின்சார திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் குமாரசாமியின் வீட்டை சுற்றி ‘மின்சார திருடன்’ என காங்கிரஸார் போஸ்டர் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்தகுமாரசாமி நேற்று தனது கட்சியினர் மத்தியில் பேசுகையில், ‘‘கர்நாடகாவில் ஆபாச திரைப்படங்கள் திரையிட்டவரை பெரிய பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். அந்த மாதிரி படங்களை காட்டியவர் கட்சியின் தலைவராக இருந்தால், இப்படித்தான் போஸ்டர் ஒட்டுவார்கள்’ என டி.கே.சிவகுமாரின் பெய‌ரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.

இதற்கு டி.கே. சிவகுமார் கூறும்போது, ‘‘குமாரசாமி முன்னாள் முதல்வர் என்ற தகுதியை மறந்து பேசுகிறார். அவர் என் தொகுதிக்குபோய், நான் அத்தகைய திரைப்படங்களை திரையிட்டவனா? எனமக்களிடம் கேட்கட்டும். இன்றைக்கும் எனக்கு சொந்தமாக திரையரங்கம் இருக்கிறது. அங்கே என்னபடம் ஓடுகிறது? என போய் பார்த்துவிட்டு வந்து பேச வேண்டும். ஆபாச படங்களை காட்டி இருந்தால் மக்கள் என்னை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வைத்திருப்பார்களா? நான் ஏதாவது சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இருந்தால் குமாரசாமி நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்துவிட்டால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மீது கார்த்தி ப சிதம்பரம் கண்வைத்துள்ளார். இந்நிலையில் தான் அவர் கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமாரை திடீரென்று சந்தித்து பரபரப்பாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கேஎஸ் அழகிரி உள்ளார். இந்நிலையில் தான் கேஎஸ் அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட உள்ளார். மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக தான் கேஎஸ் அழகிரி இன்னும் மாற்றப்படவில்லை. இந்த தேர்தல் நவம்பர் 30ம் தேதியுடன் முடிய உள்ளது. அதன்பிறகு 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து கேஎஸ் அழகிரி மாற்றப்பட உள்ளார்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி ப சிதம்பரம் விரும்புகிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப சிதம்பரத்தின் மகனான இவர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் கார்த்தி ப சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தால் திறமையாக நிர்வகிப்பதாக அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையே தான் திடீரென்று கார்த்தி ப சிதம்பரம், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், அந்த மாநில துணை முதல்வருமான டிகே சிவக்குமாரை சந்தித்துள்ளார். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை பெறும் விஷயத்தில் டிகே சிவக்குமாரிடம் ஆதரவு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. தென்இந்தியாவை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கனா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவர்களில் பலமான தலைவராக டிகே சிவக்குமார் உள்ளார். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுக்க முயன்றனர். அப்போது டிகே சிவக்குமார் அவர்களை தனது சொந்த மாவட்டமான ராமநகர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்க வைத்து பாஜகவுக்கு பெரும் சவால் அளித்தார். இதன்மூலம் டிகே சிவக்குமார் இந்தியா முழுவதும் அவர் பிரபலமான தலைவரானார்.

மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவின் குட்புக்கில் இவர் உள்ளார். அதோடு சமீபத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.மாநில தலைவர் என்ற முறையில் டிகே சிவக்குமார் இந்த தேர்தலை சிறப்பாக கையாண்டு பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியை அரியணை ஏற வைத்தார். இதனால் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற டிகே சிவக்குமாரின் ஆதரவு இருந்தால் அது இன்னும் எளிமையாகும் என நினைத்து கார்த்தி ப சிதம்பரம் அவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.