கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜன.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசிக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது. ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் மற்றும் ஜித்தின்ஜாய் மட்டுமே ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினார். சிபிசிஐடி., கூடுதல் எஸ்பி., முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஸ்ரீதரன் இவ்வழக்கின் விசாரணையை வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.