பலத்த பாதுகாப்பை மீறி புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்!

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புழல் மத்திய சிறைச்சாலை என்பது சென்னையில் அமைந்துள்ள மத்திய சிறை வளாகமாகும். 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை மத்திய சிறைக்கு பதிலாக புழல் சிறைச்சாலை செயல்படத் தொடங்கியது. இது இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகும். இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட சிறைகளில் ஒன்றும் ஆகும் இது. சிறை வளாகம் 212 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இது மூன்று கட்டிட வளாகங்களை உள்ளடக்கியது: புழல் சிறை தண்டனை கைதிகளுக்கு I, புழல் சிறை தடுப்பு கைதிகளுக்கான சிறை II மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறை 111. இந்த நிலையில்தான் அங்கே பெண்கள் சிறப்பு சிறையில் நேற்று அதிர்ச்சி தரும் சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறைக்குள் கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்கு பிறகு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. மாலையில் கணக்கெடுக்கும் போது ஜெயந்தி காணவில்லை. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஜெயந்தி. இவர் பிற்பகல் வரை சிறையில் இருந்துள்ளார். மதிய உணவிற்கு பின் பணிகளை செய்துள்ளார். ஆனால் மாலை கணக்கு எடுக்கும் முன் அவர் தப்பி ஓடி உள்ளார். சுவர் உள்ளது: இந்த சிறையில் ஜன்னல்கள் கொண்ட அறைகள் மற்றும் தங்குமிடங்கள், கதவுகள் கொண்ட கழிவறைகள், தியான மண்டபம், நூலகம், ஆம்பிதியேட்டர், ஆடிட்டோரியம், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய சிறை நீதிமன்றம், சமையலறைகள், பிரத்தியேக சமையலறை மற்றும் மருத்துவமனையுடன் கூடிய உயர் பாதுகாப்புத் தொகுதிகள், உடற்பயிற்சி கூடம், கேண்டீன், பொது இசை கூடம் ஆகியவை வசதிகள் உள்ளன. அதேபோல் புனர்வாழ்வுத் தொகுதி மற்றும் ஆண்கள் மற்றும் பெண் கைதிகளுக்கு தனித்தனி தூக்கு மேடை ஆகியவையும் உள்ளன.

இவை எல்லாம் 10 அடி உயரமான சுவர் கொண்டு மூடப்பட்டு உள்ளது. மொத்தமாக இரண்டு காம்புவுண்ட் சுவர்கள் இதை சுற்றி சுற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு சுவர்கள் இருந்தும் கூட.. இங்கே பாதுகாப்பு இருந்தும் கூட புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட சிறைகளில் ஒன்றும் ஆகும் இது. அப்படி ஒரு சிறையில் இருந்து இவர் தப்பி ஓடி உள்ளார். இவர் எப்படி வெளியே சென்றார். எகிறி குதித்து ஓடினாரா? அல்லது ஏதாவது வாகனம் மூலம் சென்றாரா? அல்லது உள்ளே இருந்தவர்கள் உதவியுடன் வெளியே சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.