குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குவைத்தின் மன்னராக 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி காலமானார். இந்த சூழலில் குவைத்தின் புதிய மன்னராக அவரது சகோதரர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபா நியமனம் செய்யப்பட்டார். குவைத்தின் புதிய அமீராக பொறுப்பேற்ற ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, நேற்று காலை தேசிய சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வின் போது பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். ஷேக் மிஷால் தனது தொடக்க உரையில், நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதாகவும், அரசியலமைப்பு கொள்கைகளை கடைபிடிப்பதாகவும், ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் புதியாக அமீராக பதிவியேற்றுள்ள ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “குவைத் மாநிலத்தின் அமீராகப் பொறுப்பேற்றுள்ள ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வரும் ஆண்டுகளில் நமது உறவுகள் மேலும் வலுப்பெறும், குவைத்தில் உள்ள இந்திய சமூகம் தொடர்ந்து செழிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.