சென்னை தண்டையார்பேட்டையில் பாயிலர் வெடித்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பெட்ரோலியம் பிரித்தெடுக்கும் பகுதியில் உள்ள பாய்லர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இதில், சரவணன், பெருமாள் ஆகிய இரு ஊழியர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 52 வயதான பெருமாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சரவணன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.