ஈரானில் ரகசிய சுரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிரோன்கள்!

ஈரான் நாட்டில் உள்ள ஜாக்ரோஸ் மலைப்பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட டிரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 1979 ம் ஆண்டு முதல் பகை இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் கிரீஸ் நாட்டு கடற்பகுதிக்குள் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்ற ஈரானின் கப்பலை அமொிக்கா சிறைபிடித்தது. இதனையடுத்து, கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான இரண்டு சரக்கு கப்பல்களை ஈரான் அதிரடியாக சிறைப்பிடித்தது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சுழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஆயுதங்கள் தாங்கிய ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை ஈரான் வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த காட்சிகளில் ரகசியமான சுரங்கப்பாதையில் ட்ரோன் தளத்தினை ஈரான் உருவாக்கியுள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதை அங்குள்ள மலைப்பகுதியின் அடியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொிவிக்கின்றன. ஈரான் நாட்டில் உள்ள ஜாக்ரோஸ் மலைப்பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட டிரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.