ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலுக்குச் செல்லப்போவதில்லை: பாஜக தலைவர் ஜே.பி. நட்டா!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பு தனக்கு வந்ததாகவும், ஆனால், ஜனவரி 22 கோயிலுக்குச் செல்லப்போவதில்லை எனவும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். ஜனவரி 22-க்குப் பிறகு ராமர் கோயிலுக்குச் செல்லவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜே.பி. நட்டா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு அழைத்ததற்கு கோயில் அறக்கட்டளைக்கு நன்றி’ எனத் தெரிவித்துக்கொண்டார். மேலும் ஜனவரி 22க்குப் பிறகு குடும்பத்துடன் ராமர் கோயிலுக்குச் செல்லவிருப்பதாக அவர் கூறியுள்ளார். கோயில் திறப்புவிழா நிகழ்வை ஜந்தேவளன் கோயிலிருந்து கண்களிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திறப்பு விழாவிற்கு பல்வேறு கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. இந்த ராமர் கோயில் திறப்புவிழா மூலம் பாஜக அரசியல் லாபம் காண முயல்கிறது எனக் குற்றம் சாட்டி மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சீத்தாராம் யெச்சூரி போன்ற அரசியல் தலைவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளனர். இது ஒரு பாஜகஆர்எஸ்எஸ் விழா என காங்கிரஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டிமுடிக்கப்படாத கோயிலுக்கு எப்படி திறப்புவிழா நடத்தமுடியும் என்றும், வேதங்களை பின்பற்றி எதுவும் நடக்கவில்லை எனவும் 4 நான்கு சங்கராச்சாரியார்களும் குற்றம்சாட்டி, அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.