காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார். பல்வேறு துறைகளில் நேரடியாகவும் தொலைதூர கல்வி மூலமாகவும் பயின்ற மொத்தம் 40, 414 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முனைவர் பட்டம் பெற்ற 164 பேர் தரவரிசையில் இடம் பெற்ற 184 பேர் என 348 பேருக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் வீ. காமகோடி ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை. விழாவில் பங்கேற்பதாகச் சொல்லிவிட்டு அமைச்சர் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.