ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டார். இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டக் குழுவின் பரிந்துரைகள் முற்றிலும் அல்ல. இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடியும் என்று அக்குழு அனுமானிக்கிறது. அவர்கள் கருதுவது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதே எங்கள் கருத்து. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சித் தன்மைக்கும் பொருந்தாதது. ஒரு அரசு பேரவையில் உறுப்பினர்களால் பெரும்பான்மையை இழந்த பிறகும் ஆட்சியில் தொடர்வது முற்றிலும் ஜனநாயகத் தன்மையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.