சென்னையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு போக்குவரத்துக் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை நடத்தி வரும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் கொங்கு மண்டலத்தில் பிப்.25-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளனர். இதற்கு முன்னதாக சென்னையில் வருகின்ற 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த கூட்டம் நடத்துவதற்கு பெருங்குடி, சோழிங்கநல்லூர் மற்றும் நந்தனம் ஆகிய 3 இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. தற்போது ஷெனாய் நகர் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.