பாலிவுட் ஸ்டார் தம்பதிகளான ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி தங்களது நெருக்கமானவர்களுக்கு கொடுத்திருக்கும் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் முதல் நட்சத்திர தம்பதிகளாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி ஆகியோர் உள்ளனர். இதையடுத்து இவர்களின் திருமணம் குடும்ப உறுப்பினர்கள், நெருக்கானமானவர்கள் முன்னிலையில் கோவாவில் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து இவர்களின் திருமணத்துக்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானி திருமண அழைப்பிதழை நெருக்கமானவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த திருமண அழைப்பிதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் திருமணம் கோவாவில் கடற்கரை அருகே நடைபெறுவதாக திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் இந்த ஸ்டார் தம்பதியினர் மத்திய கிழக்கு நாடுகளில் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டிருந்தார்களாம். இதையடுத்து புதிதாக திருமணம் செய்து கொள்ளும் விரும்பும் தம்பதியினர் இந்தியாவில் வைத்து தங்களது திருமணத்தை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி பேசியதை கருத்தில் கொண்டு தங்களது திருமணம் இடத்தை மாற்றியுள்ளனர்.