ஆப்கானிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்றவற்றின் பயிற்சி முகாம்கள் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானின் சில மாகாணங்களில் பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. தலிபான் உடன் நெருங்கிய தொடா்பில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்காா்கா் மாகாணத்தில் 8 பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. 3 முகாம்கள் தலிபான்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. கிழக்கு துா்கிஸ்தான்,உஸ்பெகிஸ்தான் நாட்டை சோ்ந்த பயங்கரவாத குழுக்களும் அங்கு பயிற்சி பெறுகின்றனா். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இந்த இயக்கத்தை சோ்ந்தவா்கள் பதுங்கியுள்ளனா்.