கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து இண்டஸ்ட்ரியிலும் நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமா துறை பற்றி பேசியது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் ஷாக் ஆக்கி உள்ளது.
கோலிவுட் சினிமாவுக்கும் டோலிவுட் சினிமாவுக்கும் திடீரென சோஷியல் மீடியாவில் தொடர்ந்து மிகப்பெரிய சண்டை நடந்து வருகிறது. அல்லு அர்ஜுன் தான் சூப்பர் டான்ஸர் என்றும் அவரை போல நடனமாடுவதற்கு யாருமே இந்தியாவில் இல்லை என தெலுங்கு ரசிகர்கள் சொல்ல, சிம்பு முதல் விஜய் வரை பலர் இருக்கின்றனர் என்றும் குண்டூர் காரம் தோல்வியை தழுவியதை வைத்து மகேஷ் பாபுவை ட்ரோல் செய்வதுமாக ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து பற்றி எரிகிறது. இந்நிலையில், ராதிகா ஆப்தேவின் பேட்டியை கோலிவுட் ரசிகர்கள் வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
2010ம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ரக்த சரித்திரா, ரக்த சரித்திரா 2 உள்ளிட்ட படங்கள் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ராதிகா ஆப்தே. 2014ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார். மீண்டும் 2015ல் பாலய்யாவுடன் இணைந்து லயன் படத்தில் நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. அதற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டார். இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ராதிகா ஆப்தே தான் பணியாற்றியதிலேயே ரொம்பவே மோசமான இண்டஸ்ட்ரி என்றால் அது தெலுங்கு சினிமா தான் எனக் கூறியுள்ளார். அங்கே உள்ள ஹீரோக்களை ஹீரோயின்களாக இருந்தாலும், கடவுளை வழிபடுவது போல வழிபட வேண்டும். அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கு என பேசி பகீர் கிளப்பி உள்ளார்.
ஏற்கனவே பாலய்யா மீது மறைமுகமாக விசித்ரா மற்றும் விசித்ரா கணவர் உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். இந்நிலையில், பாலகிருஷ்ணாவுடன் தொடர்ந்து லெஜண்ட் மற்றும் லயன் உள்ளிட்ட படங்களில் நடித்து விட்டு அதன் பின்னர் தெலுங்கில் ராதிகா ஆப்தே நடிக்காத நிலையில், பாலய்யா தான் காரணமா? அவரை பற்றித்தான் ராதிகா ஆப்தே பேசியுள்ளாரா? என நெட்டிசன்கள் பிரித்து மேய்ந்து வருகின்றனர்.
அஜய் தேவ்கன் தயாரிப்பில் 2016ம் ஆண்டு வெளியான பார்ச்சட் திரைப்படத்தில் ஆடையே இல்லாமல் முழு நிர்வாணமாக ராதிகா ஆப்தே நடித்திருப்பார். லஸ்ட் ஸ்டோரீஸ், சாக்ரட் கேம்ஸ் உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் போல்டாக நடித்திருப்பார். ஆடைகளை துறந்து நடித்ததன் பின்னர் கபாலி பட நாயகிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் குறைந்து போனது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவே இல்லை. ராதிகா ஆப்தேவின் குற்றச்சாட்டுக்கு கீழ் தெலுங்கு ரசிகர்கள் அவரை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக பாலய்யா ரசிகர்கள் ராதிகா ஆப்தேவை ஆபாசமான கமெண்ட்டுகளில் திட்டி வருகின்றனர். டோலிவுட் திரையுலகமே இப்படித்தான் என சோஷியல் மீடியாவில் சண்டை வலுத்து வருகிறது.