இஸ்ரோ இன்று வெற்றிகரமாக தனது ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டை இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவியுள்ளது. இது ஒரு மெட்டாலஜிக்கல் துறையின் சாட்டிலைட் ஆகும். இது நேரடியாக ஜிடிஓ என்ற சுற்று வட்ட பாதையில் இருந்து பூமியை கண்காணித்து தரவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள மெட்டாலஜிக்கல் துறை சார்பில் இன்சாட் என்ற சேட்டிலைட்கள் வரிசையாக தயார் செய்யப்பட்டு விண்ணில் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இன்சர்ட் 3டி மற்றும் 3dஆர் ஆகிய சேட்டிலைட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது இன்சர்ட் 3 டிஎஸ் என்ற சாட்டிலைட் இன்று வெற்றிகரமாக இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இன்சாட் 3டி செயற்கைக்கோள் என்பது பூமியின் ஜிடிஓ எனப்படும் சுற்றுவட்ட பாதையில் நின்று தொடர்ந்து பூமியை கண்காணிக்கும். இது நிலப்பரப்பு, கடல் பரப்பு, அலைகள், பெருங்கடல்கள், ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து பூமிக்கு தகவலை அனுப்பும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பூமியில் உள்ள இயற்கை பேரிடர்கள் வானிலை நிலவரங்கள் குறித்து துல்லியமான தகவல்களை நம்மால் பெற முடியும்.
இந்த சேட்டிலைட்டை இஸ்ரோ நிறுவனம் தனது ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பி உள்ளது. சரியாக திட்டமிட்டபடி 5:35 மணிக்கு விண்ணில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. மொத்தம் மூன்று செய்திகளாக இந்த ராக்கெட் பிரிக்கப்பட்டுள்ளன. சாலிட் புரோபல்ஷன், லிக்விட் புரோபல்ஷன், மற்றும் கிரையோஜினிக் புரோபல்ஷன் ஆகிய மூன்று ஸ்டேஜ்கள் இந்த ராக்கெட்டில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற ஏவுதல் எல்லாம் இஸ்ரோவிற்கு சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இது ஜிஎஸ்எல்வி ராக்கெட்டையே இதுவரை 15 முறை ஏவி உள்ளது. இது 16 முறையாக தற்போது ஏவப்பட்டுள்ளது. இதனால் விஞ்ஞானிகள் இதில் கைதேர்ந்த அனுபவம் பெற்ற விஞ்ஞானிகளாக மாறிவிட்டனர். அது மட்டுமில்லாமல் தற்போது ஏவுதல் எல்லாம் தானியங்கியாக செயல்படும் வகையில் இஸ்ரோ தனது வடிவமைப்பை மாற்றி விட்டது. சரியாக ஏவுதலுக்கு ஒரு சில நிமிடங்கள் முன்னர் தானியங்கி கம்ப்யூட்டர் முழு கட்டுப்பாட்டையும் தன்னூல் எடுத்துக் கொள்ளும் அதற்குப் பிறகு விஞ்ஞானிகளே எதுவும் செய்ய முடியாது. முற்றிலும் தானியங்கியாக விஞ்ஞானிகள் முன்னரே புரோகிராம் செய்யப்பட்டபடி தான் இந்த ஏவுதல் நடைபெறும் அப்படியாக தான் இந்த ஏவுதலும் நடைபெற்றது. எல்லாம் திட்டமிட்டபடி சரியாக இருந்தால் தானியங்கியாக ராக்கெட் விண்ணை நோக்கி பாய துவங்கி விடும்.
ஏற்கனவே சந்திரயான் போன்ற மிகப்பெரிய சாதனைகளையே இஸ்ரோ சாதாரணமாக செய்த நிலையில் தற்போது இந்த சேட்டிலைட் ஏவுதல் என்பது இஸ்ரோவிற்கு ஒரு அல்வா சாப்பிடுவது போன்ற விஷயம்தான். இதனால் அது மிக அசால்டாக இஸ்ரோ இந்த விண்வெளி கையாளும் இதுபோன்று அடுத்த தொடர்ந்து பல்வேறு மிஷன்கள் காத்திருக்கிறது. தற்போது நடந்த இந்த ஏவுதலை நேரில் காண்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி சுமார் 5000 பேர் கேலரியில் வந்து இந்த நிகழ்வை நேரில் கண்டு களித்தனர். அறிவியல் ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பட்டாளம் இந்த நிகழ்வை நேரில் கண்டுகளிக்க வந்திருந்தது. ஆண்டிற்கு வெகு சில ஏவுதல்களை இஸ்ரோ நடத்தி வருவதால் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது.
தற்போது இஸ்ரோ நிறுவனம் ககன்யான் சோதனையில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே ககன்யான் சோதனைக்கான முதல் கட்ட சோதனை என்பது நடந்து விட்டது. ககன்யான் திட்டம் என்பது பூமியிலிருந்து மூன்று நபர்களை விண்வெளிக்கு கூட்டி சென்று மீண்டும் அவர்களை பத்திரமாக திரும்ப கூட்டி வருவது தான். இது தான் இஸ்ரோவின் அடுத்த மிகப்பெரிய திட்டமாக இருக்கிறது. இந்தியாவின் இஸ்ரோ அமைப்பை தற்போது உலக நாடுகள் பார்த்து வரும் நிலையில் ஒவ்வொரு ஏவுதலும் உலக நாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஏவுதல் இஸ்ரோவிற்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தாலும் இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் அனுபவத்தால் தீபாவளி ராக்கெட் விடுவது போல மிக அசால்டாக ஏவி சாதனை படைத்துள்ளனர்.
இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்சாட் 3டிஎஸ் திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள். வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக உடனுக்குடன் தரக்கூடிய திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் சரியான முறையில் இயங்குகின்றன. செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஜிஎஸெல்வி 14, இன்சாட் 3டிஎஸ் மற்றும் செயற்கைக்கோளில் உள்ள பேலோட் எனப்படும் தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பை தயாரித்த அனைவருக்கும் பாராட்டுகள். ஜி.எஸ்.எல்.வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.