சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. அது மட்டும் அல்ல அதே காரணங்களுக்காக மேலும் ஒரு படத்திலும் நடிக்க மறுத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு ஒரு லிமிட் வைத்திருக்கிறார். அந்த லிமிட்டை தாண்டி கவர்ச்சியாக நடிக்க மாட்டார். அதே போன்று படுக்கயறை காட்சிகள், உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகளிலும் நடிக்க மாட்டார் கீர்த்தி சுரேஷ்.
தன்னிடம் கதை சொல்ல யாராவது வந்தால், உங்கள் படத்தில் படுக்கையறை காட்சிகள், லிப்லாக் இருந்தால் தயவு செய்து கிளம்புங்கள் என கூறிவிடுவார். அது அவர் பாலிசி.
இந்நிலையில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க கீர்த்தி சுரேஷை தேடி இயக்குநர் ஒருவர் சென்றிருக்கிறார். படத்தில் ஹீரோவுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் காட்சி இருக்கிறது என இயக்குநர் கூறியிருக்கிறார். அதை கேட்ட கீர்த்தியோ, சாரி சார். நான் லிப் டூ லிப் காட்சிகளில் எல்லாம் நடிப்பது இல்லை. நீங்கள் வேறு யாரையாவது நடிக்க வைத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டாராம்.
அது மட்டும் அல்ல ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் பாலிவுட் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மேஸ்ட்ரோ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்தாதுன் படத்தில் படுக்கையறை காட்சி, லிப் டூ லிப் காட்சி எல்லாம் உண்டு. ரீமேக்கிலும் அந்த காட்சிகளை அப்படியே வைக்க முடிவு செய்தார்கள். அதனால் தான் நிதின் நடித்த மேஸ்ட்ரோ படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். அவர் நடிக்க மறுத்ததும் நபா நடேஷை மேஸ்ட்ரோ படத்தில் நடிக்க வைத்தார்கள்.
கீர்த்தி தற்போது பாலிவுட் சென்றிருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவானுடன் சேர்ந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெறி படத்தை இயக்கிய அட்லி தான் பேபி ஜானையும் இயக்குகிறார். டோலிவுட், கோலிவுட், மல்லுவுட் சரி ஆனால் பாலிவுட்டில் லிப் டூ லிப் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் எல்லாம் ரொம்ப சாதாரணமாச்சே. கீர்த்தி சுரேஷ் அங்கு எப்படித் தான் தாக்குப்பிடிக்கப் போகிறாரோ, தெரியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.