96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த பிரபலங்கள் சிலர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சிவப்பு நிற பேட்ச் அணிந்து வந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.
பார்பி படத்தில் வரும் காட்சியுடன் தொடங்கிய ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், முதல் விருதை பிரபல இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓபன்ஹெய்மர்’ திரைப்படம் தட்டிச் சென்றிருக்கிறது. இந்த திரைப்படம் 13 பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், சிறந்த படத்தொகுப்புக்காக தனது முதல் விருதை வென்றிருக்கிறது. பெண் எடிட்டர் ‘ஜெனிஃபர் லேம்’ இந்த விருதை பெற்றிருக்கிறார். அதேபோல சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ‘ஹோய்ட் வன் ஹோய்ட்மா’ வென்றிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில், விருது விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் சிலர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சிவப்பு நிற பேட்ச் அணிந்து வந்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல பாடகராக அறியப்படும் ‘பில்லி ஐலிஷ்’ உள்ளிட்ட பிரபலங்கள் சிவப்பு நிற பேட்சை அணிந்து வந்திருந்தனர். இதற்கு முன்னர் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் பிரபலங்கள் இந்த பேட்சை அணிந்திருந்தனர். போரை நிறுத்துவது குறித்து பல்வேறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் தொடரும் என்று கூறியுள்ளார். இதற்கு அமெரிக்காவும் துணை போயுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் ஹாலிவுட் திரைப்பட துறை சேர்ந்த சுமார் 400 பேர் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனாலும், பைடன் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஏதும் வெளியிடவில்லை. இந்த போரில் இதுவரை 30,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது காசாவில் பஞ்சம் உருவாகியுள்ளது. பசியால் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையை உடனடியாக மாற்ற போர் நிறுத்தம்தான் தீர்வு என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது. போர் நிறுத்தம் குறித்த தீர்மானங்களை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா கொண்டு வரும்போதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துள்ளது.
இந்நிலையில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதினை அறிவிக்க முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்து விட்டார் ஜான் சீனா. இதனால், அரங்கே சில நிமிடம் திக்குமுக்காடிப்போய், பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
96வது அகாடமி விருது விழா இந்திய நேரப்படி காலை 5மணிக்கு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விழா நடைபெற்று வருகிறது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கி வருகிறார். உள்ளார். பார்பி படத்தில் வரும் காட்சியுடன் ஆஸ்கர் விருது விழா ஆரம்பம் ஆனது. ஆஸ்கர் விருதுகள் 2024: சிறந்த தழுவல் திரைப்படத்துக்கான விருதை அமெரிக்கன் ஃபிக்ஷன் திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘The Boy and the Heron’ திரைப்படத்தை இயக்கிய Hayao Miyazaki வென்றார். மேலும், கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹைமர் திரைப்படம் பல விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகராக சிலியன் மர்பி, சிறந்த துணை நடிகராக ராபர்ட் டவுனி ஜூனியர், திரைப்பட எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்காகவும் விருதை வென்றது.
இந்த விழாவில் வித்தியாசத்தை காட்டுகிறேன் என்று சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை வழங்க ஜான் செனா ஆஸ்கார் மேடைக்கு நிர்வாணமாக வந்தார். இதை சிறிதும் எதிர்பாராதா தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் திகைத்து நிற்க, விளக்கு அணைக்கப்பட்டு, அரங்கில் இருந்தவர்கள் ஓடி வந்து அவருக்கு அவசர அவசரமாக ஆடை மாற்றினார்கள். இதையடுத்து, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை புவர் திங்ஸ் படத்துக்கு வழங்கினார். இதனால், ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.