அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறாா். எனவே, அதிமுக கட்சியின் பெயா், சின்னம், கொடியை அவரும், அவரது ஆதரவாளா்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் மார்ச் 12ல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கில் மார்ச் 18 பிற்பகல் 2.15க்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.