நாட்டினை விமர்சனம் செய்யும் நாம் வாக்களிக்க வருவதில்லை. கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நடிகை ரம்யா பாண்டியன் கூறினார்.
நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. சூர்யா தயாரித்த இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், இன்ஸ்டாவிலும் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்றுநேற்று மதியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும், ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை, அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதுபற்றி, வாக்களித்துவிட்டு அவர் கொடுத்துள்ள பேட்டியில், “நாம் அனைவரும் 100 சதவீத அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். அது நம் அனைவரின் கடமை. நமது நாட்டினை பற்றி ரொம்ப குறை சொல்கிறோம். விமர்சனங்கள் செய்கிறோம். நல்லதுதான். ஆனால், அதை எல்லாம் மாற்ற நாம் வாக்களிக்க வேண்டும். அதைவிடுத்து, நாட்டினை மாற்றும் சக்தியாக தேர்தலில் வாக்களிக்க மறந்து விடுகிறோம். இது தவறு. நாம் அனைவரும் நிச்சயம் வாக்களித்து நம் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்” என்று வாக்காளர்களை அறிவுறுத்தினார்.