நடிகை தமன்னா மீது ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது. இதற்காக அவர் சைபர் கிரைம் போலீஸார் முன்பாக ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவ
கோலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து பிரபலமான தமன்னா சவுத் இந்தியாவில் அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையாத நிலையில், பாலிவுட் பக்கம் சென்றார். இந்தி வெப்சீரிஸ்களில் உச்சகட்ட கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு தொடர்ந்து அதுமாதிரியான வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகின்றன. அடுத்த வாரம் தமிழில் அரண்மனை 4 படம் தமன்னா நடிப்பில் வெளியாக உள்ள நிலையில், ஐபிஎல் ஸ்ட்ரீமிங் தொடர்பான வழக்கில் தற்போது தமன்னா வசமாக சிக்கியிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் வரும் மே 3ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், மும்பை போலீஸார் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருப்பது திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் தமன்னா ஈடுபட்டுள்ளதாக புகார்கள் குவிந்துள்ளன. ஃபேர் பிளே ஆப் மூலம் சட்டவிரோதமாக ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மோசடி வழக்கில் நடிகை தமன்னா ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா சைபர் ஐடி விங் நடிகை தமன்னாவுக்கு இதுதொடர்பாக சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் ஏப்ரல் 29ம் தேதி நடிகை தமன்னா இதுதொடர்பாக விளக்கம் அளிக்க சைபர் கிரைம் போலீஸார் அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்த சட்டத்துக்கு விரோதமான ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில், இப்போதைக்கு வர முடியாது என்றும் இன்னொரு தேதியில் வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.