மருத்துவ ரீதியான இன்சூரன்ஸ் எடுத்தவர்களுக்கு அதற்கான பாலிசி தொகையை 1 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆவணங்களை சமர்ப்பித்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பாலிசிதாரர் அக்கவுண்டில் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது .
இன்சூரன்ஸ் நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) புதன்கிழமையன்று உடல்நலக் காப்பீடு குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது. காப்பீட்டாளர் பணம் வேண்டி கோரிக்கை வைத்த பின் ஒரு மணி நேரத்திற்குள் பணம் கொடுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. ஆவணங்களை சோதனை செய்த பின் 1 மணி நேரத்திற்குள் சோதனை செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களுக்கு தேவையான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்த ஜூலை 31, 2024 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஜூலை 31, 2024க்குள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, சுகாதார காப்பீட்டு பாலிசி வைத்திருப்பவர்கள், மூலம் முந்தைய ஆண்டில் எந்த claim கோரிக்கையும் செய்யப்படாவிட்டால், புதிதாக அடுத்த வருடத்தில் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது. அதாவது கடந்த வருடம் நீங்கள் எந்த claim கோரிக்கையும் செய்யவில்லை என்றால் இந்த வருடம் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெற முடியும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. தற்சமயம், கடந்த வருடம் நீங்கள் எந்த claim கோரிக்கையும் செய்யவில்லை என்றால் இந்த வருடம் செலுத்த வேண்டிய பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறும் வசதி தற்போது இல்லை. இதுவரை பாலிசிதாரர்களுக்கு க்ளைம் போனஸ் வழங்கப்படுவதில்லை. இனி நேற்று முதல் புதிய விதி அமலுக்கு வரும்.
பாலிசிதாரர்கள் புதுப்பித்தலின் போது காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பது அல்லது பிரீமியத்தில் தள்ளுபடி செய்வது ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்வதற்கான விருப்பம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது மெடிக்கல் இன்சூரன்சுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற இன்சூரன்சுக்கு பொருந்தாது. மோட்டார் காப்பீட்டிற்கு, பாலிசிதாரர்களுக்கு க்ளைம் போனஸ் புதுப்பித்தல், பிரீமியத்தில் தள்ளுபடி வழங்குதல் போன்ற சலுகைகள் தரப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.