சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்களின் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசுதிரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜூலை 8-ம் தேதி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருவதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.