கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற சா்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்ததற்காக அந்த சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2020-இல் கொரோனா நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, அந்த நோயால் உயிரிழந்த அனைவரது உடல்களும் கட்டாயம் தகனம் செய்யப்பட வேண்டும் என்று அப்போதைய அரசு உத்தரவிட்டது. இது முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாக சா்வதேச அளவில் அப்போதே சா்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், கட்டாய தகன உத்தரவு தொடா்பாக முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிகாரபூா்வமாக மன்னிப்பு கோரவும் இது போன்ற தவறான உத்தரவுகள் மீண்டும் பிறப்பிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சட்டம் இயற்றவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.