இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது சீனா!

2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா கால விசா கொள்கையை இந்தியாவுக்கான சீன தூதரகம் மாற்றி அமைத்தது.

கொரோனா பரவலையொட்டி கடந்த 2020-ம் ஆண்டு, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதற்கு சீனா தடை விதித்திருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா கால விசா கொள்கையை இந்தியாவுக்கான சீன தூதரகம் நேற்று முன்தினம் மாற்றி அமைத்தது. அதன்படி, ஏற்கனவே சீனாவில் பணிபுரிந்த, மீண்டும் அங்கு செல்ல விரும்பும் இந்தியர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கான விசா விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீனப் பல்கலைக்கழகங்களில் பயின்று கொரோனா காலத்தில் தாய்நாடு திரும்பிய, மீண்டும் அங்கு செல்ல ஆர்வம் காட்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பு, 2 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து மீண்டும் சீனா செல்ல முடியாமல் தவித்த பல்வேறு துறை ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.